மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனைகிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
பாலியல் தொல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் வி.மாதேப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 47 வயது கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 22.1.2022 அன்று கூலித்தொழிலாளியின் மனைவியும், மாமியாரும் வேலைக்கு சென்றனர்.
வீட்டில் மகன், மகள் மற்றும் தந்தை ஆகிய 3 பேரும் மட்டும் இருந்தனர். அப்போது தொழிலாளி தனது மகனை வெளியே அனுப்பிவிட்டு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து தந்தைக்கு தர்மஅடி கொடுத்து கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
20 ஆண்டு சிறை தண்டனை
இதையடுத்து போலீசார் போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 ஆயிரம் இழப்பீடும் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.