பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை


பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
x

நன்னடத்தை விதியை மீறி பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடி தென்னங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சைபுநிஷா (வயது54).இவர் மீது 15 ஆண்டுகளுக்கு மேலாக 10-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சைபு நிஷா கஞ்சா விற்பதை கட்டுப் படுத்தும் விதமாக தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் குற்ற விசாரணை முறைச் சட்டப்பிரிவு 110-ன் கீழ் நன்னடைத்தைக்கான உறுதிமொழி பெறுவதற்கு திருவாடானை தாசில்தாருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

அதன் அடிப்படையில் சைபு நிஷாவிடம் ஒரு ஆண்டுக்கு நன்னடைத்தைக்கான உறுதிமொழி பெறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் சைபுநிஷா கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து தொண்டி போலீசார் அவரை கைது செய்து நேற்று திருவாடானை தாசில்தார் முன்பு ஆஜர்படுத்தினர்.அப்போது தாசில்தார் செந்தில்வேல் முருகன் சைபு நிஷாவை ஒரு ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பரமக்குடி மகளிர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்..


Related Tags :
Next Story