மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை


மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை
x

மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனையில் செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை


மதுரை மத்திய சிறையில் 2500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில், கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி, சிறைத்துறை சூப்பிரண்டு வசந்த கண்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மதுரை சிறையில் சோதனையில் ஈடுபட்டனர். தனித்தனி குழுவாக பிரிந்து சென்று ஒவ்வொரு அறைகளில் உள்ள கைதிகளிடம் சோதனையில் ஈடுபட்டனர். இதுபோல், அங்குள்ள சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது. சில கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில கைதிகளிடம் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story