மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய  கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை  கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

கிருஷ்ணகிரி

மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பலாத்காரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை குல்லட்டியை அடுத்த சாலிவரத்தை சேர்ந்தவர் திம்மப்பா (வயது 28). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் ஆடு மேய்க்கும் மனநலம் பாதித்த 27 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து அந்த பெண்ணுக்கோ, மற்றவர்களுக்கோ தெரியவில்லை. 6 மாதங்களுக்கு பிறகு உடல்நலம் பாதித்த அந்த பெண்ணை பரிசோதித்தபோது போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

10 ஆண்டு சிறை

இதுதொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அப்போது அங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரவணன் விசாரணை நடத்தி கடந்த 24.5.2019 அன்று திம்மப்பாவை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி குற்றம்சாட்டப்பட்ட திம்மராஜ் மனநலம் பாதித்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி அப்பெண் கருவுற்றது நிரூபிக்கப்பட்டது. இதனால் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றியதற்காக 10 ஆண்டு சிறை, 5 ஆயிரம் அபராதம் மற்றும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா உத்தரவிட்டார். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.


Next Story