சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 34 ஆண்டு சிறை


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 34 ஆண்டு சிறை
x

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 34 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர்


13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 34 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (வயது 24). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 27-10-2020 அன்று 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாயார் தாராபுரம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் தாராபுரம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெயகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத் தனர்.

34 ஆண்டு சிறை

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஜெயகிருஷ்ணனுக்கு 34 ஆண்டு சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். சிறப்பாக சாட்சியை ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த தாராபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, நீதிமன்ற பெண் காவலர் திவ்யா ஆகியோரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.


Related Tags :
Next Story