வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
ராமநாதபுரம் அருகே மூதாட்டியை தாக்கிய நகையை பறித்து சென்ற வாலிபருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே மூதாட்டியை தாக்கிய நகையை பறித்து சென்ற வாலிபருக்கு ராமநாதபுரம் கோர்ட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புகார்
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள வரவணியை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மனைவி பாப்பா (வயது80). இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் தேதி வயலில் குப்பை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது அவரை நோட்டமிட்டு பின்தொடர்ந்து சென்ற வாலிபர் பாப்பாவை கீழே தள்ளி தாக்கி அவர் அணிந்திருந்த 2½ பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
இதுகுறித்து பாப்பாவின் மகள் கண்ணாத்தாள் (44) என்பவர் ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வரவணியை சேர்ந்த செவந்தி மகன் ராசு என்ற ராமு (27) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
சிறை தண்டனை
வழக்கினை விசாரித்த நீதிபதி சீனிவாசன் மூதாட்டியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட ராசு என்ற ராமுவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.200 அபராதமும் அதனை கட்டதவறினால் மேலும் ஒரு மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மனோகரன் ஆஜரானார்.