21 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 2 வாலிபர்களுக்கு 10 ஆண்டு சிறை


21 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 2 வாலிபர்களுக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 1 Jun 2023 2:30 AM IST (Updated: 1 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் 21 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் 2 வாலிபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தேனி

தேனி அல்லிநகரம் பாண்டி கோவில் மலை அடிவாரத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அல்லிநகரம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த ஒரு சாக்கு பையை சோதனை செய்தனர். அதனுள் 21 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் பெரியகுளம் கூர்மையா கோவில் தெருவை சேர்ந்த சின்னராஜா மகன் பிரபாகரன் (வயது 24), சுருளிமணி மகன் ராம்குமார் (27) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு மதுரை போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது, இந்த வழக்கில் சிக்கிய பிரபாகரன், ராம்குமார் ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story