தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேருக்கு 9 ஆண்டு சிறை


தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேருக்கு 9 ஆண்டு சிறை
x
திருப்பூர்


அவினாசி, பெருமாநல்லூர் போலீஸ் நிலைய சரக பகுதிகளில் கடந்த 2021-ம் ஆண்டு வீட்டு முன் கோலம்போட்டு கொண்டிருந்த பெண், மொபட்டில் சென்று கொண்டிருந்த பெண்களிடம் நகைகளை வழிப்பறி செய்த திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த அரவிந்த் (வயது24), பாலாஜி (21), திருப்பூர் மும்மூர்த்தி நகரைச் சேர்ந்த யுவராஜ் (24), கூடலூரை சேர்ந்த தினேஷ் (22) ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து அவினாசி கோர்ட்டில் ஒப்படைத்தனர். இவர்கள் மீது சுமத்தப்பட்ட 6 வழக்குகளின் விசாரணையின் முடிவில் அவினாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.எஸ்.சபீனா வழிப்பறியில் ஈடுபட்ட யுவராஜூக்கு 12 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதமும்,பாலாஜி, தினேஷ், அரவிந்த் ஆகிய 3 பேருக்கும் தலா 9 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story