பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் சிறை..!


பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் சிறை..!
x

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால், சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும் என தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

சென்னை:


சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில்10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பலரும் நினைக்கின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி ஒரு சில பகுதிகளில் அரசு அலுவலங்களில் கூட பத்து ரூபாய் நாணயங்கள் மதிக்கப்படுவது இல்லை.

ஆனால், பத்து ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தாலோ, செல்லாது என்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

அதாவது, இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளித்தால், இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவு ஏ-வின் படி குற்றம். எனவே, இந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story