வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்காரருக்கு சிறை தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு


வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்காரருக்கு சிறை தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வழக்கறிஞரை தாக்கிய போலீஸ்காரருக்கு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் ராக்கப்பன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் வழக்கறிஞர் ராக்கப்பன் கடந்த 2019-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் மம்சாபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது தனியார் பள்ளி அருகே போலீஸ் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் முத்துப்பாண்டி, அண்ணாதுரை ஆகியோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வழக்கறிஞர் ராக்கப்பனை தாக்கி உள்ளனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் ராக்கப்பன் கொடுத்த புகாரின் பேரில் மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வள்ளி மணவாளன், வழக்கறிஞர் ராக்கப்பனை தாக்கிய போலீஸ்காரர் முத்துப்பாண்டிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து, போலீஸ்காரர் அண்ணாதுரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.


Next Story