செல்போன்களை திரும்ப தரக்கோரி சிறைவாசிகள் காத்திருப்பு போராட்டம்


செல்போன்களை திரும்ப தரக்கோரி சிறைவாசிகள் காத்திருப்பு போராட்டம்
x

செல்போன்களை திரும்ப தரக்கோரி சிறைவாசிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இந்த சிறப்பு முகாமில் நடத்தப்பட்ட சோதனையில் 155 செல்போன்கள், 3 லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்போன்களை திரும்ப வழங்க வேண்டும் என்று முகாம் சிறைவாசிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 7-ந்தேதி முகாம்வாசிகள் 13 பேர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு திடீரென மயங்கினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 10-ந்தேதி இரவு சிறப்பு முகாம்வாசிகள் 23 பேர் முகாம் சுவரின் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று 25-வது நாளாக பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 60-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story