வாழ்முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா


வாழ்முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா
x

செம்போடை வாழ்முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா செம்போடைமேற்கு கிராமத்தில் காத்தாயி அம்மன், வாழ் முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக காத்தாயி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள வாழ்முனீஸ்வரருக்கு பெண்கள் மாவிளக்கு போட்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து அன்னவாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குப்புசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் மற்றும் செம்போடை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story