புனித தலங்களை சுற்றுலா நகரமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்துகும்பகோணத்தில், ஜெயின் சமூகத்தினர் ஊர்வலம்
புனித தலங்களை சுற்றுலா நகரமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக சென்றனர்.
புனித தலங்களை சுற்றுலா நகரமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கும்பகோணத்தில் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலமாக சென்றனர்.
புனித தலங்கள்
சம்மேத்ஷிகர்ஜி, பாலிதானா, கிர்ணாஜி உள்ளிட்ட ஜெயின்களின் புனித தலங்களை சுற்றுலா நகரமாக மாற்றும் ஜார்கண்ட் மாநில அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வசிக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலம் சென்றனர்.
ஜெயின்களின் முக்கிய புனித தலங்களான சம்மேத்ஷிகர்ஜி, பாலிதானா, கிர்ணாஜி உள்ளிட்ட இடங்களை ஜார்கண்ட் மாநில அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது. இவைகளை சுற்றுலா தலமாக மாற்றினால் ஜெயின்களின் அடிப்படை மதக்கோட்பாடுகள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாக கூறி ஜெயின் சமூகத்தினர் இந்த ஊர்வலத்தை நடத்தினர்.
கைவிட வலியுறுத்தல்
அப்போது புனித தலங்களை சுற்றுலா தலமாக மாற்றும் திட்டத்தை ஜார்கண்ட் மாநில அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
கும்பகோணம் பெரிய கடை வீதி பகுதியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.