ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

ஜல் சக்தி அபியான் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கண்காணிப்பு குழு அலுவலர் அறிவுறுத்தினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜல் சக்தி அபியான் திட்டத்தின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான மத்தியக்குழு கண்காணிப்பு அலுவலரும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனருமான தினேஷ் குமார் ராணா தலைமை தாங்கினார். கலெக்டர் அமர்குஷ்வாஹா. ஜல் சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ராஜேஷ் குலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் தினேஷ் குமார் ராணா பேசுகையில், ''திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ஜல் சக்தி அபியான் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு, அமுத குளம், பண்ணை குட்டைகள் ஆகிய நீர் மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகிறது. ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும்'' என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர;ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலாதா, வேளாண்மை இண இயக்குனர் பச்சையப்பன், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், ஊரக வளர்ச்சித்துறை செயற் பொறியாளர் சுந்தரபாண்டியன், தாசில்தார்கள் சிவப்பிரகாசம், பூங்கொடி, சம்பத், மகாலட்சுமி, நகராட்சி ஆணையர்கள் பழனி, ஷகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story