மினிலாரி மோதி ஜல்லிக்கட்டு காளை செத்தது; டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்


மினிலாரி மோதி ஜல்லிக்கட்டு காளை செத்தது; டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்
x

மினிலாரி மோதி ஜல்லிக்கட்டு காளை செத்தது. டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது காளையும் கலந்து கொண்டது. வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளை மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் காளை கிடைக்கவில்லை. இந்நிலையில் இரவு நேரத்தில் முடிகொண்டான் அருகே சாலையில் ஜல்லிக்கட்டு காளை நடந்து வந்தபோது எதிர்பாராத விதமாக மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே காளை உயிரிழந்தது. இதுகாளை உரிமையாளர் மற்றும் ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் விபத்துக்கு காரணமான மினிலாரி டிரைவரை கைது செய்ய வேண்டும். காளைக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை- அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story