ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழப்பு - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு


ஜல்லிக்கட்டு  போட்டியில் உயிரிழப்பு -  முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jan 2023 7:49 PM IST (Updated: 22 Jan 2023 7:50 PM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் மூன்று லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்'

சென்னை,

இதுகுறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

'புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன் (வயது 58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த பூமிநாதன் (வயது 52) மற்றும் தருமபுரி மாவட்டம், தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை சேகரிக்கும் இடத்தில் நின்றிருந்த கோகுல் (வயது 14) ஆகியோரை போட்டியில் பங்குபெற்ற காளைகள் எதிர்பாராத விதமாக முட்டியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையுற்றேன்.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் மூன்று லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்' என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story