ஜல்லிக்கட்டு- ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது


ஜல்லிக்கட்டு- ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது
x

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர், காளைகளுக்கான டோக்கன் பதிவிறக்கம் தற்போது தொடங்கி உள்ளது.

மதுரை,

தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகின்றன. புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் பங்கேற்கும்.

இதில் அவனியாபுரத்தில் நாளையும்(15-ம் தேதி), பாலமேட்டில் 16-ம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர், காளைகளுக்கான டோக்கன் பதிவிறக்கம் தற்போது தொடங்கி உள்ளது.

madurai.nic.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் டோக்கனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்; டோக்கனில் அனுமதி சீட்டு எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றுடன் QR Code இணைக்கப்பட்டுள்ளது


Next Story