கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்திகலெக்டர் தலைமையில் நாளை தொடங்குகிறது
கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி கலெக்டர் தலைமையில் நாளை தொடங்குகிறது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கி 13-ந் தேதி வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) நடைபெறுகிறது. இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
எனவே கண்டாச்சிபுரம் தாலுகாவில் உள்ள பொதுமக்கள் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், இலவச வீட்டு மனை, பட்டா ஒப்படைப்பு, ரேஷன் கார்டு உள்ளிட்ட இதர கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை ஜமாபந்தி நடைபெறும் நாளை, நாளை மறுநாள்(வியாழக்கிழமை) மற்றும் 8,9,12,13 ஆகிய தேதிகளில் மாவட்ட கலெக்டரிடம் நேரில் வழங்கி தீர்வு காணலாம்.
மேற்கண்ட தகவலை கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story