திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சப்- கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடந்தது.
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. சப்- கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 52 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 32 மனுக்கள் ஏற்கப்பட்டது. 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கிராமங்களில் வருவாய்த் துறை மூலம் பராமரிக்கப் பட்டு வரும் பல்வேறு வகையான கணக்கு பதிவேடுகள் சரி பார்க்கப்பட்டது. 2 பயனாளிகளுக்கு உட்பிரிவு செய்து நத்தம் பட்டாக்களுக்கான ஆணைகளை சப்- கலெக்டர் வழங்கினார். தாசில்தார் சிவப்பிரகாசம், சமூக பாதுகாப்பு தாசில்தார் காஞ்சனா, துணை தாசில்தார் ஜெகதீசன், மண்டல துணை தாசில்தார் தேன்மொழி, மண்டல துணை தாசில்தார் முரளி கிருஷ்ணன், வட்டத் துணை ஆய்வாளர் ரவி, தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சுமதி, கிராம நிர்வாக அலுவலர்கள் சுந்தரேசன், ஜெயசூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.