ஆவுடையார்கோவில், ஆலங்குடியில் ஜமாபந்தி


ஆவுடையார்கோவில், ஆலங்குடியில் ஜமாபந்தி
x

ஆவுடையார்கோவில், ஆலங்குடியில் ஜமாபந்தி நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது. இதற்கு கலால் மேற்பார்வை அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் முதல்நாள் பொன்பேத்தி சரகத்திற்கான கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. அந்த சரகத்தில் உள்ள பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் செய்திருந்தார். நிகழ்ச்சியில் தனி தாசில்தார், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வேளாண்மைத்துறை, புள்ளியியல் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மீமிசல் சரகத்திற்கும், 20-ந் தேதி ஏம்பல் சரகத்திற்கும், 21-ந் தேதி ஆவுடையார்கோவில் சரகத்திற்கும் ஜமாபந்தி நடக்கிறது. மாலையில் குடிகள் மாநாடு நடைபெறும்.

ஆலங்குடி தாலுகாவில் புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம்) ரம்யாதேவி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் மாவட்ட நேர்முக உதவியாளர் சரவணன், தாசில்தார் விஸ்வநாதன், மண்டல துணை தாசில்தார் ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் ராஜேஸ்வரி, குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் பெரியநாயகி, வல்லநாடு வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வல்லநாடு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பொது மக்களிடம் இருந்து 51 மனுக்கள் பெறப்பட்டது. கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) கீரமங்கலத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.


Next Story