சின்னசேலத்தில் ஜமாபந்தி கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் தொடங்கியது


சின்னசேலத்தில் ஜமாபந்தி கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் தொடங்கியது
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 7:02 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் ஜமாபந்தி கோட்டாட்சியர் பவித்ரா தலைமையில் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதற்கு கோட்டாட்சியர் பவித்ரா தலைமை தாங்கினார். தாசில்தார் இந்திரா முன்னிலை வகித்தார். இதில் தனி தாசில்தார்கள் ரகோத்மன், வளர்மதி, மண்டல துணை தாசில்தார் மனோஜ், தேர்தல் துணை தாசில்தார் கோவிந்தராசு, வருவாய் ஆய்வாளர்கள் பாபுகணபதி, உமா மகேஸ்வரி, செந்தில், கிராம நிர்வாக அலுவலர்கள் ரஞ்சித்குமார், நாகராஜ், தர்மராஜ், ஜெயபால், செல்வகுமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வடக்கனந்தல் குறுவட்டத்திற்கு உட்பட்ட எடுத்தவாய்நத்தம், மண்மலை செல்லம்பட்டு, கரடிசித்தூர் வடக்கு, தெற்கு, மாதவச்சேரி வடக்கு, தெற்கு, மற்றும் தாவடிப்பட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 191 மனுக்களை கொடுத்தனர். இதில் 2 பேருக்கு பட்டா உத்தரவும், 2 பேருக்கு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் உத்தரவும் அலுவலர்கள் வழங்கினர்.

தொடர்ந்து நேற்று பால்ராம்பட்டு, மாத்தூர், வடக்கனந்தல் கிழக்கு, மேற்கு, கச்சிராயபாளையம் பரிகம், ஏர்வாய்பட்டினம், மல்லியம்பாடி, பொட்டியம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள், கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story