ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி


ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது. கலவை தாலுகா அலுவலகத்தில் 24, 25, 26-ந் தேதிகளில் கலெக்டர் தலைமையிலும், அதே தேதிகளில் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், வாலாஜா தாலுகா அலுவலகத்தில் 24, 25, 26, 30-ந் தேதிகளில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும், 24, 25, 26, 30, 31-ந் தேதிகளில் ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர், நெமிலி தாலுகா அலுவலகத்தில் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் நடைபெற உள்ளது.

நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், அரசு நலத்திட்டங்களின் கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்டப் பணிகள், குடிநீர், சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பான மனுக்கள் ஜமாபந்தி அலுவலரால் பெறப்படும். ஒரு கிராமத்தில் சம்பந்தப்பட்ட மனுக்கள் அக்கிராம கணக்குகள் தணிக்கை நாளன்று அளிக்க வேண்டும். முன்னதாக கொடுக்கப்படும் மனுக்கள் அக்கிராம தணிக்கை நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அஞ்சல் மூலமாக மனு அனுப்ப விரும்புபவர்களும் ஜமாபந்தி அலுவலருக்கோ அல்லது தாசில்தாருக்கோ அனுப்பலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.


Next Story