சங்கராபுரம் தாலுகாவில் ஜமாபந்தி
சங்கராபுரம் தாலுகாவில் ஜமாபந்தி தொடங்கியது.
சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. இதற்கு வருவாய் தீர்வாய அலுவலரும், திருக்கோவிலூர் கோட்டாட்சியருமான யோகஜோதி தலைமை தாங்கி வடபொன்பரப்பி குறுவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதில் பட்டா மாற்றம் தொடர்பாக 49 மனுக்கள், வீட்டுமனைப் பட்டா கேட்டு 43 மனுக்கள், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 8 மனுக்கள், பிற மனுக்கள் என மொத்தம் 111 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் சங்கராபுரம் தாசில்தார் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார் சேகர், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, வருவாய் ஆய்வாளர் நிறைமதி மற்றும் வடபொன்பரப்பி குறுவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.