சின்னசேலத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி


சின்னசேலத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:21 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை மறுநாள் தொடங்குகிறது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளைமறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறுகிறார். இதில் வடக்கனந்தல் குறு வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நாளை மறுநாள், 6-ந்தேதியும், நைனார்பாளையம் குறுவட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் 7,8-ந்தேதியும், சின்னசேலம் குறுவட்ட கிராமங்களை சே்ாந்த மக்கள் 9,12-ந்தேதியும் தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கி பயன்பெறலாம். இந்த தகவலை சின்னசேலம் தாசில்தார் இந்திரா தெரிவித்துள்ளார்.


Next Story