தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மனுக்களை பெற்று கொண்டார்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மனுக்களை பெற்று கொண்டார்.
ஜமாபந்தி
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில் நாயுடுமங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை வழங்கினர். இதில் 103 மனுக்கள் பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் தாசில்தார் சரளா, வட்ட வழங்கல் அலுவலர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, தலைமையிடத்து துணை தாசில்தார் மு.சாந்தி உள்பட வருவாய்த்துறை அலுவலர்கள், விவசாய பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் நாயுடுமங்கலம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.
திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருகிற 29-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் மந்தாகினி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தாசில்தார் சாப்ஜான், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், ஜமாபந்தி மேலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேட்டவலம் வருவாய் உள் வட்டத்தைச் சேர்ந்த 27 கிராமங்களுக்கான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புதிதாக பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, வீடு அளவை, நில அளவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை வருவாய் கோட்ட அலுவலரிடம் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வழங்கினர்.
இதில் வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், தலைமையிடத்து துணை தாசில்தார் தனபால், தலைமையிடத்து சர்வேயர் சாகுல்அமீது, வருவாய் ஆய்வாளர்கள் அரிகிருஷ்ணன் (வேட்டவலம்), நந்தகோபால் (கீழ்பென்னாத்தூர்), மகாலட்சுமி (சோமாசிபாடி) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசி
வந்தவாசி தாலுகா அலுலவகத்தில் நடந்த ஜமாபந்திக்கு திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கோ.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
மழையூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட மழையூர், கோதண்டபுரம், கடம்பை, தென்கரை, பொன்னூர், வடவணக்கம்பாடி, ஜப்திகாரணி உள்ளிட்ட கிராமங்களின் கணக்குகளை அவர் தணிக்கை செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றார்.
இதில்தாசில்தார் கி.ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுபாஷ்சந்தர், துணை தாசில்தார் சதீஷ், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஜமாபந்தி வருகிற ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.