சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.595-க்கு ஏலம்


சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.595-க்கு ஏலம்
x

சத்தியமங்கலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.595-க்கு ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3½ டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.595-க்கும், முல்லை ரூ.240-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.46-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.


Next Story