மதுரை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2500-க்கு விற்பனை - மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது


மதுரை மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2500-க்கு விற்பனை - மற்ற பூக்களின் விலையும் உயர்ந்தது
x

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2500-க்கு நேற்று விற்பனையானது.

மதுரை


மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2500-க்கு நேற்று விற்பனையானது.

மல்லிகை விலை உயர்வு

பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் காரணமாக மதுரை மார்க்கெட், முக்கிய வீதிகளில் கரும்பு, காய்கறி, மஞ்சள் குலைகள், பொங்கல் மண்பானை வியாபாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்று உயர்ந்திருக்கிறது.

அதன்படி நேற்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2500-க்கு விற்பனை செய்யப்பட்டது. முல்லை ரூ.1300, பிச்சி ரூ.1200, சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.300 என மற்ற பூக்களின் விலையும் அதிகமாகவே காணப்பட்டது.

இன்னும் உயரக்கூடும்

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று மதுரை மார்க்கெட்டில் மல்லிகை விலை அதிகபட்சம் ரூ.1800 வரை விற்பனையானது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு 2 தினங்களுக்கு முன்பே ரூ.2500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொங்கல் பண்டிகை வரை மதுரை மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றனர்.


Next Story