மல்லிகை கிலோ ரூ.400-க்கு விற்பனை


மல்லிகை கிலோ ரூ.400-க்கு விற்பனை
x

அருப்புக்கோட்ைடயில் மல்லிகை கிலோ ரூ.400-க்கு விற்பனை ஆனது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்ைடயில் மல்லிகை கிலோ ரூ.400-க்கு விற்பனை ஆனது.

மல்லிகை சாகுபடி

அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி, தொட்டியாங்குளம், குறிஞ்சாங்குளம், சித்தலக்குண்டு, இலங்கிப்பட்டி, பாளையம்பட்டி, கட்டங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு விளையும் மல்லிகை பூ அருப்புக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த பூவினை எண்ணற்ற வியாபாரிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

கிலோ ரூ.400

இதுகுறித்து அருப்புக்கோட்டையை சேர்ந்த பூ வியாபாரி திலகராஜ் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் கோவில் திருவிழா, விசேஷ காலங்களில் மல்லிைக பூ கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகை பூ கிலோ ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது முகூர்த்த நாட்கள் இருந்தாலும் மல்லிகை பூவின் விலை உயரவில்லை.

நேற்று மல்லிகை பூ கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை ஆனது. அதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயரவில்லை. விற்பனையும் எதிர்பார்த்த அளவு நடக்கவில்லை. வரும் காலங்களில் முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி போன்ற விசேஷ நாட்களுக்கு பூக்களின் விலை உயர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story