ஜெயலலிதா பிறந்தநாள் விழா
செங்கோட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா அறிவுரையின்பேரில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச்செயலாளா் பொய்கை மாரியப்பன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவா் தங்கவேலு, நகர்மன்ற தலைவா் ராமலட்சுமி, துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகரச்செயலாளா் கணேசன் வரவேற்றார். அதனைதொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின்னா் அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பிரட், பழங்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டது. தொடா்ந்து நகரின் முக்கிய வீதிகளில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.