ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்- செ.தாமோதரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி அருகே உள்ள தாளக்கரை அ.தி.மு.க கிளைக் கழகத்தின் சார்பாக டி.நல்லிக்கண்டன்பாளையத்தில் உள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு செ.தாமோதரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி இனிப்பு மற்றும் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு துணைத் தலைவர் பி.ஈஸ்வரமூர்த்தி, போடிபாளையம் செல்வி பத்மினி, தனபால், ஆச்சிபட்டி பழனிச்சாமி, தேவம்பாடி பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளக்கரை அ.தி.மு.க கிளை செயலாளர் என்.தவச்செல்வகுமார் வரவேற்று பேசினார். இதில் முத்துச்சாமி குழந்தைவேல், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தளபதி சக்திவேல், கனகசபாவதி, ராமலிங்கம், சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம், தினசரி காய்கறி சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் செ.தாமோதரன் எம்.எல்.ஏ,. அ.தி.மு.க கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா படத்திற்கு மலர் மாலை அணிவித்து நிர்வாகிகளுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க நிர்வாகிகள், கிணத்துக்கடவு அ.தி.மு.க பேரூராட்சி செயலாளர் கே.என். மூர்த்தி, கண்ணம்மாள் லட்சுமணன், தங்கராஜ், கோபால், நடராஜ், ஆறுச்சாமி, அப்புராஜ், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story