ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x

நாமக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பள்ளிபாளையம் நகர, ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிபாளையம் ஆவரங்காடு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஜெயலலிதா உருவப்படம் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மின்சார துறை அமைச்சருமான தங்கமணி கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது, நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடையும். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய நாம் அனைவரும் அயராது கடுமையாக உழைப்போம் என கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

நிகழ்ச்சிக்கு பள்ளிபாளையம் நகர அ.தி.மு.க. செயலாளர் வெள்ளியங்கிரி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செந்தில் வரவேற்றார். தொகுதி செயலாளர் சுப்பிரமணியம், ஒன்றிய பொருளாளர் திருமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணி, நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஆண் பெண் பாசறை உறுப்பினர்கள், சார்பு மன்ற தொண்டர்கள், நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், தொழில் பிரிவு நிர்வாகிகள் சரவணன், சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதேபோல் ஆனங்கூர் ஊராட்சியில் தலைவர் சிங்காரவேலு தலைமையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் உறுப்பினர்கள், கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பரமத்திலேூர்

பரமத்திவேலூர் தாலுகாவில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியதை கொண்டாடும் வகையில் பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி மற்றும் கபிலர்மலை ஆகிய பகுதிகளில் கொண்டாடப்பட்டது. பரமத்திவேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

பாண்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி, நாமக்கல் ஆவின் சேர்மன் ராஜேந்திரன், வெங்கரை பேரூர் செயலாளர் ரவீந்தர், பாண்டமங்கலம் பேரூர் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொத்தனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொத்தனூர் பேரூர் செயலாளரும், பொத்தனூர் கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ்.எம்.நாராயணன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் தனசேகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கபிலர்மலை

இதேபோல் பரமத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரமத்தி நகர செயலாளர் பைக் சுகுமார், தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். கபிலர்மலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமையில், கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜே.பி.ரவி, கபிலர்மலை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மோகனூர்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா மோகனூர் கிழக்கு ஒன்றியம், மோகனூர் பேரூர் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்றது. விழாவுக்கு மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மோகனூர் பேரூர் செயலாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான ராஜவடிவேல் வரவேற்றார். மோகனூர் பஸ் நிலையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் மோகனூர் பேரூர் அவை தலைவர் ஆசைதம்பி, பேரூர் துணைச் செயலாளர் சிவஞானம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் முருகேசன், அணியாபுரம் - தோளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், ஒன்றியகுழு உறுப்பினருமான ராமச்சந்திரன், மோகனூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுதாகர், ஐ.டி. விங் பாண்டியன், முன்னாள் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் கார்த்தி மற்றும் குமாரசாமி, கவுதம், ஒன்றிய, பேரூர், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story