ஜெயலலிதா பிறந்த நாள் விழா


ஜெயலலிதா பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல இலந்தைகுளத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

பனவடலிசத்திரம்:

தென்காசி வடக்கு மாவட்டம் மானூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ் ஆணைக்கிணங்க மேலஇலந்தைகுளத்தில் கிளை கழகத்தின் சார்பில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவப்பட்டது. விழாவில் ஜெயலலிதா பேரவை எஜமான் செந்தில்குமார் மற்றும் கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். நடுவக்குறிச்சியில் நடைபெற்ற விழாவுக்கு கிளை செயலாளர் ராஜதுரை தலைமை தாங்கினார். ஒன்றிய முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதேபோல் தேவர்குளம், வன்னிக்னேந்தல், கூவாச்சிபட்டி, மூவிருந்தாளி, அச்சம்பட்டி, மடத்துப்பட்டி, பனவடலிசத்திரம், திருமலாபுரம், குருக்கள்பட்டி, மேல நீலிதநல்லூர், கீழநீலிதநல்லூர், சண்முகநல்லூர், மருக்காலங்குளம் ஆகிய ஊர்களிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


Next Story