லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் ஜெயந்தி விழா


லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் ஜெயந்தி விழா
x

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் ஜெயந்தி விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா கலச ஸ்தாபனம், தீபாராதனையுடன் தொடங்கியது. நேற்று காலை 5 மணிக்கு கோ பூஜை, விஸ்வக்சேன ஆராதனை, நவக்கிரக ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், லட்சுமி குபேர ஹோமம் ஆகியவை நடைபெற்றன. இதையடுத்து காலை 10 மணிக்கு லட்சுமி நரசிம்ம சாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. 11 மணிக்கு உற்சவர் பிரகார உற்சவம், தீர்த்த பிரசாதம் வழங்குதலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நரசிம்ம சாமி கோவில்களில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.


Next Story