காலபைரவர் கோவிலில் ஜெயந்தி விழா


காலபைரவர் கோவிலில் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 18 Nov 2022 1:00 AM IST (Updated: 18 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

காலபைரவர் கோவிலில் ஜெயந்தி விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே கல்லுகுறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் காலபைரவர் கோவிலில் 812-வது ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடந்தன.

தொடர்ந்து காலை 8 மணி முதல் அன்னதானமும், 10 மணிக்கு கால பைரவர் சாமி, சீத்த பைரவர் சாமி ஆகிய உற்சவ சிலைகள் ஊர்வலமும் நடந்தன. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அருகில் உள்ள கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.


Next Story