என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை


என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
x

மேலூரில் என்ஜினீயர் வீட்டில் நகை, பணம் ெகாள்ளை போனது. மேலும் கும்பல் பக்கத்து வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

மதுரை

மேலூர்,

மேலூரில் என்ஜினீயர் வீட்டில் நகை, பணம் ெகாள்ளை போனது. மேலும் கும்பல் பக்கத்து வீட்டில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் திருடி சென்றனர்.

அரசு என்ஜினீயர்

மதுரை மாவட்டம் மேலூரில் யூனியன் அலுவலகம் பகுதியில் உள்ள காந்திநகரைச் சேர்ந்தவர் காவேரியம்மாள். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இளங்கோவன் என்பவர் சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொறியாளராக வேலை பார்க்கிறார். மற்றொரு மகன் ஜெயகாந்தன் என்பவர் சென்னை தேனாம்பேட்டையில் போலீஸ் ஏட்டாகவும், அவரது மனைவி சஜிபா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராகவும் வேலை பார்க்கின்றனர். பொறியாளர் இளங்கோவனும் குடும்பத்தினரும் மேலூரில் உள்ள காந்திநகர் வீட்டில் காவேரியம்மாளுடன் வசிக்கின்றனர்.

இளங்கோவனின் மனைவி கருணாகலைவாணி வங்கி ஒன்றில் பணி புரிகிறார். அவர் சேலத்தில் உள்ள வங்கிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அங்கு அவர் பணியில் சேருவதற்காக இளங்கோவன், அவரது மனைவி கருணாகலைவாணியுடன் நேற்று முன்தினம் சேலம் சென்று விட்டார்.

ஜன்னலை உடைத்து திருட்டு

காவேரியம்மாளும் அவரது பேரனும் மேலூரில் இரவில் வீட்டில் உள்ள அறை ஒன்றில் தனியாக தூங்கி உள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவை திறந்து அவற்றில் இருந்த பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். அந்த நேரத்தில் அருகிலுள்ள வசந்தி என்னும் வக்கீல் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச்சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை காவேரியம்மாள் எழுந்து பார்த்தபோது அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு இருந்ததும், வீட்டின் பின்பகுதியிலுள்ள ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. இதனை பார்த்து பதறிய காவேரியம்மாள் சம்பவம் பற்றி சேலத்தில் உள்ள அவரது மகன் இளங்கோவனிடம் பேசி தெரிவித்தார். அதனை தொடர்ந்து மேலூர் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

போலீஸ் விசாரணை

கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் சம்பவ வீட்டில் இருந்து வெளியே சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. பெரும்பாலான நகை மற்றும் முக்கிய பொருட்களை வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதால் திருட்டு போகாமல் தப்பியுள்ளதாகவும், சேலத்தில் உள்ள இளங்கோவன் வந்த பின்னரே என்னென்ன பொருட்கள் திருட்டு போய் உள்ளது என்ற விவரம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Related Tags :
Next Story