வங்கி ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு


வங்கி ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 May 2023 12:15 AM IST (Updated: 20 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே கோட்டைமேட்டில் வெள்ளையத்தேவன் நகரில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி மகன் தவசிவேல் (வயது 40). இவர் கமுதியில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வித்யா. இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் காலை வீட்டை பூட்டிவிட்டு தவசிவேல் கடைக்கு சென்றார். மாலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவை உடைத்து அதிலிருந்து ஒரு தங்க காதணி, ரூ.9 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரிய வந்தது இது குறித்து கமுதி போலீஸ் நிலையத்தில் தவசிவேல் அளித்த புகாரில் வழக்குபதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சமீபத்தில் வித்யா வீட்டில் இருந்த நகையை தனது தாய் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருந்ததால் அவை தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story