ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் திருட்டு


ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் திருட்டு
x

நெல்லையில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை பெருமாள்புரம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது73). இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்று விட்டார். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் சென்று முன் பக்க கதவின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோவில் இருந்த 21 பவுன் தங்க நகை மற்றும் ரொக்க பணம் 10 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கடாசலம், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.


Next Story