வியாபாரி வீட்டில் நகை மாயம்; போலீசார் விசாரணை


வியாபாரி வீட்டில் நகை மாயம்; போலீசார் விசாரணை
x

வியாபாரி வீட்டில் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த அப்புவிளை கீழத்தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 45), பால் வியாபாரி. இவருடைய உறவினர்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து வருகிறார்கள். அவர்கள் இருமுடிகட்டும் விழாவிற்கு செல்வதற்காக பீரோவை திறந்தபோது அங்கு வைத்து இருந்த 10½ பவுன் தங்க சங்கிலி, 4 பவுன் கை சங்கிலி மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சரவணன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story