கோவிலில் நகை-பணம் கொள்ளை


கோவிலில் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே கோவிலில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே கோவிலில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

முருகன் கோவில்

கன்னியாகுமரி அருகே உள்ள முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பூசாரி, கோவிலில் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டி சென்றார். பின்னர் நேற்று காலையில் பூசாரி வழக்கம் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வாசலில் கண்காணிப்பு கேமராக்கள் உடைந்து கிடந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அங்கு உண்டியலும் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் கோவில் நிர்வாகத்தினருக்கும், கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

நகை-பணம் கொள்ளை

விசாரணையில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து பணத்தையும், கோவிலில் உள்ள புவனேசுவரி அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் கோவிலின் வேல் மண்டபத்தில் இருந்த வேல்களை வளைத்து திருட முயற்சி செய்துள்ளதும் தெரிந்தது. இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அங்கு கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவன் கோவிலுக்குள் நடமாடும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த நபர் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த காட்சிகளை கைப்பற்றி மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story