வீட்டில் நகை-பணம் திருட்டு
கடையம் அருகே வீட்டில் நகை-பணம் திருடு போனது.
தென்காசி
கடையம்:
கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி வடக்கு புதுமனை தெருவைச் சேர்ந்தவர் அகமது மீரான் என்பவருடைய மனைவி அசன்பாத்து (வயது 75). இவர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் வீட்டை பூட்டி சாவியை கதவின் மேலே வைத்துவிட்டு அருகே உள்ள கடைக்கு சென்றாா்.
பின்னர் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.5ஆயிரம் மற்றும் 5 கிராம் தங்க மோதிரத்தை மர்மநபர் திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story