பஸ் ஊழியர்களுக்கு பாராட்டு
தவற விட்ட நகையை மாணவியிடம் திரும்ப ஒப்படைத்த ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில் இருந்து சம்பவத்தன்று நாகை வழித்தடத்தில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் தோப்புத்துறையை சேர்ந்த செந்தில் மகள் கல்லூரி மாணவி ஜெயபாரதி என்பவர் நாகைக்கு பயணம் செய்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பஸ்சில் தவறவிட்டார். அந்த தங்க சங்கிலியை பஸ் டிரைவர் வடிவேலு, கண்டக்டர் விநாயகம் ஆகியோர் பத்திரமாக எடுத்து வைத்து, ஜெயபாரதியிடம் நகையை ஒப்படைத்தனர். இதற்கு மாணவியின் பெற்றோர் சார்பில் சமூக அலுவலர் கோவிந்தராஜுலு மற்றும் பயணிகள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story