மூதாட்டியிடம் நகை பறிப்பு


மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் நகை பறிப்பு

கோயம்புத்தூர்

நெகமம்

நெகமம் காந்தி நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சுந்தரம்மாள்(வயது 70). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் சுந்தரம்மாள் கடந்த 7-ந் தேதி நெகமம் சந்தையில் ஜவுளி வியாபாரம் செய்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள், சுந்தரம்மாளின் அருகில் வந்ததும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி முகவரி கேட்பது போல் அவரிடம் பேசினர். தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 2½ பவுன் தங்க நகையை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து நெகமம் காவல் நிலையத்தில் சுந்தரம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story