திருக்கோவிலூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு தர்மஅடி


திருக்கோவிலூர் அருகே    பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு தர்மஅடி
x

திருக்கோவிலூர் அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள அருத்தகுடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி செல்லம்மாள்(வயது 47). இவர் அதேஊரில் தனக்கு சொந்தமான வயலுக்கு அங்குள்ள ஏரிக்கரை வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் திடீரென செல்லம்மாளை வழிமறித்து, அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

இதைபார்த்த அக்கம் பக்கத்தில் இருந்த விவசாய கூலி தொழிலாளர்கள் அந்த மர்மநபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து திருப்பாலப்பந்தல் போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துறைப்பட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story