பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வீரக்குமார் மனைவி சசிகலா (வயது 39). இவர் நேற்று முன்தினம் இரவு எட்டயபுரத்தில் இருந்து தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மர்மநபர் திடீரென்று, சசிகலா கழுத்தில் அணிந்து இருந்த ½ பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் எட்டயபுரம் போலீசார் மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story