கோவிலில் நகை திருட்டு; பூசாரி கைது


கோவிலில் நகை திருட்டு; பூசாரி கைது
x

கோவிலில் நகை திருட்டு தொடர்பாக பூசாரி கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே ஆலம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 76). இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அதே ஊரைச் சேர்ந்த ராசாங்கம்(59) பூசாரியாக இருப்பதுடன், கோவிலையும் பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கோவிலை திறந்து பார்த்தபோது மாரியம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 33 கிராம் தங்க நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பூசாரி ராசாங்கத்திடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் அளித்தார். அதன்பேரில் ராசாங்கம் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story