ஓய்வுபெற்ற அரசு கல்லூரி ஆய்வக உதவியாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை


ஓய்வுபெற்ற அரசு கல்லூரி ஆய்வக உதவியாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
x

தாந்தோணிமலையில் ஓய்வுபெற்ற அரசு கல்லூரி ஆய்வக உதவியாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்

நகை-பணம் கொள்ளை

கரூர் தாந்தோணிமலை பகுதிக்குட்பட்ட விக்னேஷ்வரா நகரை சேர்ந்தவர் குருநாதன் (வயது 70). இவர் அரசு கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் குருநாதன் தனது குடும்பத்தினருடன் திருவாரூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டார்.பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருநாதன் வீட்டினுள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அவர் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்கநகைகள், ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடுத்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவம் குறித்து குருநாதன் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விரல்ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story