ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் ரத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 31 பேருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்பட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 24 ஆயிரத்து 31 பேருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்பட்டதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நகைக்கடன் ரத்து
ராணிப்பேட்டையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
ஓராண்டு காலத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள நன்மைகள் குறித்து எடுத்துக் கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
அதன்படி முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 9,309 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 1,696 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. 527 பேருக்கு கல்விக்கடன் தரப்பட்டுள்ளது. 1 கோடியே 69 ஆயிரத்து 50 பஸ் பயணங்களை கட்டணமில்லாமல் பெண்கள் மேற்கொண்டுள்ளனர்.
24 ஆயிரத்து 31 பேரின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 5 பவுனுக்கு கீழ் உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்போவதாக சொன்னோம். அதனை கிண்டல் செய்தார்கள், கேலி செய்தார்கள், விமர்சனம் எல்லாம் செய்தார்கள். அதையெல்லாம் சரியாக இருக்கிறதா? என்று சரிபார்த்து இப்போது படிப்படியாக செய்திருக்கிறோம். அந்த வகையில் இந்த மாவட்டத்தை பொறுத்தவரைக்கும், 24 ஆயிரத்து 31 பேரின் நகைக்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.
6 லட்சம் பேர் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளது. 346 பேர் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். ஆவின்பால் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக 90 ஆயிரம் நுகர்வோர் பயனடைந்துள்ளனர். 2,082 உழவர்களுக்கு புதிதாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 18,377 பேர் வருமுன் காப்போம் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். 3 லட்சத்து 30 ஆயிரத்து 366 பேர் கொரோனா கால நிவாரண நிதி பெற்றுள்ளனர். 3 லட்சத்து 30 ஆயிரத்து பேர் 22 வகையிலான மளிகை பொருட்களை பெற்றுள்ளனர்.
தொழில்திறன் பயிற்சி
3 லட்சத்து 30 ஆயிரம் பேர் 22 வகையான மளிகை பொருட்களை பெற்றுள்ளனர். 2,437 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 34 ஆயிரத்து 987 பேரின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 84 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. 1 லட்சத்து 82 ஆயிரத்து 950 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. 1,680 குடும்பங்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 6 கோவில்கள் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 4 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
7,289 மகளின் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.361 கடன் வழங்கப்பட்டுள்ளது. 239 இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி தரப்பட்டுள்ளது. 300 புதிய சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. 4 நகராட்சிகளில் ரூ.2 கோடியே 14 லட்சம் மதிப்பில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 40 சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.