தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகை-பணம் திருட்டு


தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகை-பணம் திருட்டு
x

போடி அருகே தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தேனி

போடி அருகே உள்ள விசுவாசபுரம் கண்ணன் கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). கட்டிட தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சாத்தூர் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் வீட்டுக்கு உள்ளே சென்றார். அங்கு பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story