நகைக்கடை ஊழியர் கைது
கவரிங் நகைகளை வைத்து விட்டு தங்க வளையல்களை திருடிய நகைக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சேலம்
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே பிரபல நகைக்கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்க வளையல்கள் திருட்டு போனது. அந்த நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகள் வைக்கப்பட்டு இருந்தது. கடையில் நகைகளை ஆய்வு செய்த ஊழியர்கள், அது கவரிங் வளையல்கள் என்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. திருட்டு போனது 6 வளையல்கள் 9½ கிராம் எடை கொண்டது என்றும், அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே வளையல்கள் திருட்டு தொடர்பாக அந்த கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்த பெரமனூரை சேர்ந்த முருகன் (வயது 46) என்பவரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story