ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை திருட்டு
கோவையில் ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை திருட்டு போனது.
குனியமுத்தூர்
கோவைப்புதூர் அருகே அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 60). சம்பவத்தன்று இவர் ஒப்பணக்கார வீதிக்கு வந்தார். பின்னர் பொருட்களை வாங்கி கொண்டு பஸ்சில் வீடு திரும்பினார். பஸ் கரும்புகடை அருகே வந்தபோது தனது கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மதுக்கரை அண்ணா சதுக்கத்தை சேர்ந்தவர் பாஞ்சாலி (வயது 70). இவர் கோவை சலிவன் வீதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடித்து தனது வீட்டிற்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தனது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.